மின்சாரம் இல்லாமல் அவதிபடும் வயதான தம்பதி
மின்சாரம் இல்லாமல் அவதிப்படும் தம்பதி
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், அடுத்த தாண்டாம்பாளையம் கிராமத்தில் விவசாயி தாண்டாக்கவுண்டர் தனது உடல் நலம் சரியில்லாத மனைவியுடன் வசித்து வருகிறார். இவரது வீட்டின் மின் இணைப்பானது கடந்த மார்ச் 22 ம் தேதி முதல் மின் பாதையில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
மீண்டும் மின் இணைப்பை வழங்க கோரி மின்சார வாரியத்தில் தகவல் தெரிவித்துள்ளனார். ஆனால் அதிகாரிகள் தகவல் தெரிவித்து 10 நாட்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து சத்தியமங்கலம் மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகிகள் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
மின் பாதை சரி செய்வதற்கு அரசியல் நெருக்கடி இருப்பதாகவும் காவல்துறை உதவியுடன் அதனை சரி செய்து உடனடியாக மின்சாரம் வழங்குவதாகவும் செயற்பொறியாளர் உத்தரவாதம் அளித்தாக கூறப்படுகிறது. ஆனால் 20 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் மின் இணைப்பு வழங்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் வயதான தம்பதியினர் மின்சாரம் இல்லாமல் அவதிபட்டு வருகின்றனர்.
மின்சார வாரியம் உடனடியாக தலையிட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்குவதுடன் தனது பணியில் மெத்தன போக்குடன் செயல்படும் மின்சார வாரிய ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடர்ந்து மின் இணைப்பு வழங்காத பட்சத்தில் வரும் 30/04/2024 செவ்வாய் கிழமை முதல் சத்தியமங்கலம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நடராஜன், அமைப்பு செயலாளர் ஜோதி அருணாச்சலம் தெரிவித்துள்ளனர்.