மாலத்தீவு, தெற்கு அந்தமான் கடலில் தென்மேற்கு பருவமழை தொடக்கம்
மாலத்தீவு மற்றும் தெற்கு அந்தமான் கடலில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மாலத்தீவு மற்றும் தெற்கு அந்தமான் கடலில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை ஆண்டு தோறும் மே மாதம் 22 ஆம் தேதி தெற்கு அந்தமான் கடலோர பகுதிகளில் தொடங்குவதும், இந்திய நிலப்பரப்பில் கேரளாவில் ஜூன் ஒன்றாம் தேதி வாக்கில் தொடங்குவதும் இயல்பு. இந்த நிலையில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை 3 நாட்கள் முன்கூட்டியே இன்றைய தினம் தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தென்மேற்கு பருவமழை மாலத்தீவு, குமரி கடல் மற்றும் தெற்கு வங்க கடல், நிக்கோபார் தீவுகள் மற்றும் தெற்கு அந்தமான் கடலின் சில பகுதிகளில் தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல். மேலும், இந்தியாவில் மே மாதம் 31 ஆம் தேதி தென்மேற்குப் பருவ மழை தொடங்க வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Next Story