ஸ்டாலின் அரசின் வீழ்ச்சி - முன்னாள் அமைச்சர் விமர்சனம்

ஸ்டாலின் அரசின் வீழ்ச்சி - முன்னாள் அமைச்சர் விமர்சனம்

உண்ணாவிரதம் 

கள்ளக்குறிச்சி விவகாரம் ஒரு மாவட்டத்தின் காவல்துறையினரின் பெயிலியர் அல்ல மாவட்ட ஆட்சியின் ஃபெயிலியர் அல்ல ஒட்டுமொத்தமாக சிஸ்டம் ஃபெயிலியர் இந்த ஆட்சி ஒட்டுமொத்தமாக செயல் இழந்திருக்கிறது இந்த ஆட்சியின் சிஸ்டம் ஒட்டுமொத்தமாக செயல் இழந்திருக்கிறது என தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சார விவகார மரணங்கள் தொடர்பாக திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து அதிமுக தரப்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அந்த உண்ணாவிரத போராட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர், கள்ளக்குறிச்சியில் எல்லோரும் அழுகிறார்கள் அண்ணன் எடப்பாடியை பார்த்தவுடன் எல்லோரும் அழுகிறார்கள் அதன் பின் தான் இந்த திமுக அரசு விழித்தது.

சிபிசிஐடி யின் விசாரணை என்ன என்பது இதுவரை தெரியவில்லை சிபிசிஐடி யின் அவுட்கம் என்ன என்று இதுவரை தெரியவில்லை. மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்பி ஆகியோரை விசாரணை மேற்கொள்ள வேண்டும். சரியாக சிகிச்சை அளிக்க முடியாமல் இறந்தவர்கள்தான் கள்ளக்குறிச்சியில் பலர் ,தாமதமான சிகிச்சை அளிக்கப்படுகிறது 120 பேரில் 3 பேருக்கு தான் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது ,காரணம் திறனற்ற நிர்வாகம்.

இது ஒரு மாவட்டத்தின் காவல்துறையினரின் பெயிலியர் அல்ல மாவட்ட ஆட்சியின் ஃபெயிலியர் அல்ல ஒட்டுமொத்தமாக சிஸ்டம் ஃபெயிலியர் இந்த ஆட்சி ஒட்டுமொத்தமாக செயல் இழந்திருக்கிறது இந்த ஆட்சியின் சிஸ்டம் ஒட்டுமொத்தமாக செயல் இழந்திருகிறது. பீனிக்ஸ் பறவையாக மீண்டும் எழுந்து அண்ணன் எடப்பாடி யார் தலைமையில் அதிமுக தமிழக மக்களை 2026இல் காப்பாற்றுவார்கள் என்றார்.

Tags

Next Story