தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை வெளியீடு!!

தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை வெளியீடு!!
X

stalin

தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் வெளியிட்டார்.

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை -2020 ஐ ஏற்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. அத்துடன் தமிழ்நாட்டிற்கென மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்கவும் முடிவு செய்து அதற்காக கடந்த 2022ம் ஆண்டு ஓய்வுபெற்ற டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முருகேசன் தல்கைமையில், 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக்குழு துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள், பெற்றோர் என பல்வேறு தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டு, புதிய மாநிலக் கல்விக் கொள்கையை வடிவமைத்துள்ளனர். 650 பக்கங்கள் கொண்ட மாநில கல்விக்கொள்கை வரைவு அறிக்கையை இந்தக்குழு கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் தயார் செய்திருந்தது. இதில் 3,5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது என்றும், தமிழ் , ஆங்கிலம் ஆகிய இருமொழி கொள்கையே கடைபிடிக்க வேண்டும் என்றும் கொள்கை வரையறைக் குழு பரிந்துரை செய்திருந்தது. பின்னர் கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி அந்த அறிக்கை மாநில அரசிடம் சமர்பிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த புதிய மாநிலக் கல்விக்கொள்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story