தவெக மாநாடு அன்று மதுபான கடைகள் மூடப்படும்: ஆட்சியர்

X
tvk manadu
தவெக மாநாடு அன்று மதுபான கடைகள் மூடப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரபத்தியில் மாநாடு நடைபெறவுள்ளது. இதற்காக இன்று மதுரை சென்ற தவெக தலைவர் விஜய், மாநாட்டு பணிகள் குறித்து இன்று மாலை நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். தவெக மாநாட்டின் பாதுகாப்பு பணியில் 3,500 போலீசார் ஈடுபடவுள்ளனர். 10 மாவட்ட எஸ்பிக்கள், 2 காவல் ஆணையர்கள், 35 டிஎஸ்பிக்கள், 80 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். இந்நிலையில் மதுரையில் தமிழக வெற்றி கழகத்டதஹ்ட்தின் மாநாடு நடைபெறும் அன்று அந்தப் பகுதியில் இருக்கும் மதுபான கடைகள் மூடப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சட்ட, ஒழுங்கு பராமரிக்கும் பொருட்டு அரசு மதுபான கடைகள் மற்றும் பார்கள் இயங்காது என்றும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
