வருவாய் துறையில் அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனே நிரப்புக: தமிழ்நாடு அரசு உத்தரவு

Tn govt
வருவாய்த் துறையில் 3 வருடங்களுக்கு கீழ் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை, காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாவட்ட ஆட்சியரின் பொது நேர்முக உதவியாளரே விதிகளுக்கு உட்பட்டு நிரப்பிக் கொள்ளலாம் என்று ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பெ.அமுதா தலைமை செயலாளர் / வருவாய் நிர்வாக ஆணையருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், “வருவாய்த்துறையில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மூன்று வருடங்களுக்கு கீழ் காலியாக உள்ள அலுவலக உதவியளர் பணியிடங்களை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்களே விதிகளுக்கு உட்பட்டு நிரப்பிடலாம் என்று ஒப்புதல் அளிக்கப்பட்டும். இதுவரை அக்காலிப்பணியிடங்களை நிரப்பிட எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே காலிப்பணியிடங்களை நிரப்பிட, மேலும் காலம் தாழ்த்தாமல், உடனடியாக நிரப்பிட நடவடிக்கை மேற்கொண்டு, அதன் அறிக்கையினை அரசுக்கு அனுப்புமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
