வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ள தங்கம் விலை!!

தங்கம்
திருமணம், தீபாவளி போன்ற பண்டிகை சீசன் நெருங்கி வரும் நிலையில், நாள் தோறும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. அதேபோல், வெள்ளியின் விலையும் மறுபுறம் அதிகரித்து வருகிறது. இது நகை வாங்குபவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தற்போது நகை வாங்கலாமா, வேண்டாமா என்ற குழப்பமும் மக்களிடையே நிலவி வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 1 கிராம் ₹70 உயர்ந்து ₹10,500-க்கும், சவரன் ₹560 உயர்ந்து ₹84,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் வரலாற்றில் ₹84 ஆயிரத்தை தொட்டது இதுவே முதல்முறை. கடந்த 2 நாள்களில் மட்டும் தங்கம் விலை ₹1,680 அதிகரித்துள்ளது. தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 149 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 49 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
