தாறுமாறாக உயர்ந்த பூக்களின் விலை..! ஒரு கிலோ மல்லி எவ்வளவு தெரியுமா ?

jasmine
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 20 ஆம் தேதி வெகுவிமர்சையாக கொண்டாடப்பட உள்ளது., இந்த பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் முதல் தங்கம் விலை வரை உயர்வை எட்டியுள்ளது. பண்டிகை காலங்களில் பூக்களின் விலையும் அதிகரிக்க துவங்கியுள்ளது, அவ்வாறு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மலர் சந்தையில் பூக்களின் விலை இரு மடங்கு அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.குறிப்பாக கடந்த வாரம் வரை கிலோ 600 க்கு விற்பனை ஆன மல்லிகை பூ இன்று 1800 ரூபாய்க்கும், பிச்சி, முல்லை, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்கள் 1300 ரூபாய்க்கும், அரளி 200, மரிக்கொழுந்து 150, பன்னீர் ரோஸ் 200, பட்டன் ரோஸ் 250, கோழி கொண்டை 100 என இரு மடங்கு உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மழை காரணமாகவும், வரத்து குறைவு மற்றும் தீபாவளி பண்டிகை காரணமாக இந்த விலை உயர்வு மேலும் அதிகரிக்கும் எனவும் மல்லிகை 2000 முதல் 3000 வரை உயர கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் கோயம்பேடு மலர்ச் சந்தைகளில் பூக்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. 1 கிலோ மல்லிகைப்பூ ₹2,500, கனகாம்பரம் ₹2,000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், முல்லை, காக்கரட்டான் ஆகியவை ₹1,500-க்கும், பிச்சி பூ ₹1,200-க்கும் விற்கப்படுகிறது.
