ஒரே நாளில் 12,000 ரூபாய் உயர்வு!!

ஏற்றுமதி, இறக்குமதியை டாலருக்கு பதிலாக தங்கத்தின் அடிப்படையில் நடத்தலாம் என்ற முடிவுக்கு மற்ற நாடுகள் வந்துவிட்டன. இதனால் தங்கம் விலையில் ஏற்றம் இருந்தது. ஜனவரி 6-ஆம் தேதியான நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ 560 உயர்ந்து ஒரு சவரன் ரூ 1,02,640 -க்கும், கிராமுக்கு ரூ 70 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 12,830-க்கும் விற்பனையாகிறது. அது போல் வெள்ளியின் விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ 271-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 2,71,000-க்கும் விற்பனையானது. இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,870க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் 1,02,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ஒரு கிராம் ரூ.283க்கும், கிலோவுக்கு மட்டுமே ரூ.12,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,83,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
