சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் 1.60கோடி பறிமுதல்
பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள்
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் தேர்தல் பணக்கும் படையால் கைப்பற்றப்பட்டது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த வாகனம் ஒன்றை மடக்கி சோதனை செய்ததில் ஒரு கோடியே அறுபது லட்சம் பணம் கட்டு கட்டாக இருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் பணம் கொண்டுவந்தவர் பெயர் மதியழகன் என்பதும் அவர் டாஸ்மாக் மேலாளர் என்பதும் டாஸ்மாக் கடைகளிலிருந்து வசூலித்து பணத்தை எடுத்து செல்வதாக கூறியுள்ளார். பணம் எடுத்து சென்றதற்கான ஆவணங்கள் இல்லாததால் பணம் மற்றும் வாகனத்தை கைப்பற்றி சோழிங்கநல்லூரில் உள்ள சென்னை மாநகராட்சி மண்டலம் 15 அலுவலகத்தில் ஒப்படைத்த பணத்தை சோழிங்கநல்லூர் கரூலத்தில் ஒப்படைத்தனர்.
Tags
Next Story