தமிழ்நாட்டில் 2024-2025ஆம் கல்வியாண்டு முதல் PM SHRI Schools தொடங்க முடிவு.
தலைமை செயலாளர்
நாடு முழுவதும் முழுமையான அடிப்படை வசதிகள் மற்றும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வழியிலான தொழில் நுட்ப வசதிகளோடு, புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான புதிய பள்ளிகள் அமைய உள்ளன.
அதோடு, 14 ஆயிரத்து 500 பள்ளிகளை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளன. மாநில பள்ளி கல்வித்துறை செயலாளர் தலைமையில் இது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் PM SHRI பள்ளி துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 2024 -2025 கல்வி ஆண்டு முன்பே கையெழுத்திடப்படும். மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் உருவாக்க உள்ள புதிய பள்ளிகளை தமிழகத்தில் துவக்குவதற்கு தமிழக அரசு ஆர்வமாக உள்ளது என்றும்,
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராக இருக்கிறது என்றும், தலைமைச் செயலாளர், மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருப்பது தற்போது வெளியாகி உள்ளது.