கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு வழக்கு ஜூன் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
நீதிமன்றம்
நீதிபதிகள் கிருஷ்ணகுமார், குமரேஷ்பாபு அமர்வு, கடந்த 2023 ஆண்டு மரக்காணத்தில் இதே போல் விஷ சாராயம் அருந்தி உயிரிழப்புகள் நடந்துள்ளது. கடந்த ஒரு வருடமாக விஷச்சாரயத்தை கட்டிபடுத்த இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? அரசின் உயர் அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள்?
ஏற்கனவே இதே போல் சாவு நடந்ததை தடுக்க தவறியதற்கு எந்த அதிகாரிகள் பொறுப்பு? இது மற்ற வழங்குகள் போல் எடுத்துக் கொள்ள முடியாது, இது மனித உயிரிகள் சம்பந்தப்பட்ட வழக்கு மதுவுக்கு அடிமையானவர்களை மீட்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது? என்றெல்லாம் கேள்வி எழுப்பினர்.
கள்ளச் சாரய சாவுகளை தடுப்பதில் தமிழக அரசு, காவல்துறை, வருவாய் துறை, மதுவிலக்கு துறை தோல்வி அடைந்து விட்டது என்று மனுதாரர்கள் தரப்பு தெரிவித்துள்ளது . மெத்தனால் பாண்டிச்சேரியில் இருந்து வாங்கி வரப்பட்டு கள்ளச்சாரயம் தயாரிக்கப்படுகிறது. இதை காவல்துறை தடுக்கவில்லை. இரு மாநில பிரச்சனை என்பதால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று அதிமுக இன்பதுரை தரப்பு தெரிவித்துள்ளது. கள்ளச்சாரயம் அருந்தியதில் இதுவரை 117 பேர் சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் ஜுப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு 47 பேர் உயிரிழந்துள்ளனர்.
89 பேருக்கு உயர் தர சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது என்று அரசு தரப்பு விளக்கம் அளித்துள்ளது. விசாரணைக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓய்வுப்பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் பணியிடமாற்றம் செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜூன் 26 ஆம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டு அன்றைய தினம் கள்ளச்சாரய உயிரிழப்புகள், அதை தடுப்பதற்கு எடுத்த நடவடிக்கை குறித்து அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.