தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை: 3 பேர் கைது

குமாரபாளையத்தில் தமிழக அரசால் தடைசெய்யபட்ட லாட்டரி விற்பனை செய்த மொத்த விறபனையாளர் உட்பட மூவர் கைது

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில மாதங்களாக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், முக்கிய குற்றவாளிகள் சிக்காமல் தப்பி வந்தனர்.

இந்நிலையில் குமாரபாளையம் நேதாஜி நகர் பகுதியில் மொத்த லாட்டரி சீட்டு விற்பனை செய்யும் நபர் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் வெள்ளைத்தாள்களில் எண்களை எழுதி கேரளா மாநில லாட்டரி எண் என விற்பனை செய்த லாட்டரி சீட்டு மொத்த விற்பனையாளர் அங்கப்பராஜ் மற்றும் அவரது கூட்டாளிகளான மணிகண்டன், ராமச்சந்திரன் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து வெள்ளைத் தாள்களில் எண்கள் எழுதப்பட்ட காகிதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்கள் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் போலி லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்யும் கிளைகளை நடத்தி வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து அவர்களை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்ட பொழுது,

கிரிக்கெட் சூதாட்டம் உள்ளிட்டவற்றை நடத்தி இருக்க கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டு கைது செய்த மூவரையும் குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர் செய்து, நீதிபதி உத்தரவின் பேரில் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். குமாரபாளையம் பகுதியில் போலீ லாட்டரி சீட்டு விற்பனை செய்த மொத்த விற்பனையாளர் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story