சென்னை மீனம்பாக்கத்தில் 35.6° செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 34.7° செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
கோப்பு படம்
தென் தமிழக பகுதிகளில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. காரைக்கால், புதுவையில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில் சிவகாசி (விருதுநகர்) 7, போடிநாயக்கனூர் (தேனி), குன்னூர் (நீலகிரி), குன்னூர் PTO (நீலகிரி) தலா 6, எச்சன்விடுதி (தஞ்சாவூர்), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) தலா 5, வெம்பக்கோட்டை (விருதுநகர்), கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), பேரையூர் (மதுரை), சிங்கம்புணரி (சிவகங்கை), காரியாப்பட்டி (விருதுநகர்), விருதுநகர் AWS (விருதுநகர்), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்) தலா 4, காக்காச்சி (திருநெல்வேலி), மாஞ்சோலை (திருநெல்வேலி), ஊத்து (திருநெல்வேலி), வெட்டிக்காடு (தஞ்சாவூர்), பெரியகுளம் (தேனி), புலிப்பட்டி (மதுரை), கெத்தை (நீலகிரி), ஆரல்வாய்மொழி (கன்னியாகுமரி), ராமநதி அணைப் பகுதி (தென்காசி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி),
திருப்பதிசாரம் AWS (கன்னியாகுமரி), நாகர்கோயில் (கன்னியாகுமரி), மஞ்சளாறு (தேனி), சாத்தூர் (விருதுநகர்), பில்லூர் அணை மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), விருதுநகர் (விருதுநகர்), சோத்துப்பாறை (தேனி), ஆயிக்குடி (தென்காசி) தலா 3, ராதாபுரம் (திருநெல்வேலி), மேலூர் (மதுரை), நாலுமுக்கு (திருநெல்வேலி), காமாட்சிபுரம் (திண்டுக்கல்), மேட்டுப்பட்டி (மதுரை), கோவில்பட்டி (திருச்சிராப்பள்ளி), கின்னக்கோரை (நீலகிரி), பாபநாசம் (திருநெல்வேலி), துறையூர் (திருச்சிராப்பள்ளி), தென்காசி (தென்காசி), பெரியபட்டி (மதுரை), குருங்குளம் (தஞ்சாவூர்),
முக்கடல் அணை (கன்னியாகுமரி), ராஜபாளையம் (விருதுநகர்), கொடைக்கானல் (திண்டுக்கல்), கன்னடயன் அணைக்கட்டு (திருநெல்வேலி), பாலமோர் (கன்னியாகுமரி), கருப்பாநதி அணை (தென்காசி), களக்காடு (திருநெல்வேலி) தலா 2, கீரனூர் (புதுக்கோட்டை), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு), மணிமுத்தாறு (திருநெல்வேலி), குளச்சல் (கன்னியாகுமரி) ,
தல்லாகுளம் (மதுரை), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), மணமேல்குடி (புதுக்கோட்டை), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), பூதலூர் (தஞ்சாவூர்), அதிராமப்பட்டினம் (தஞ்சாவூர்), அதிராமப்பட்டினம் PTO (தஞ்சாவூர்), கோத்தகிரி (நீலகிரி), சிவகிரி (தென்காசி), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி), பூதப்பாண்டி (கன்னியாகுமரி), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி), கல்லந்திரி (மதுரை), நத்தம் (திண்டுக்கல்),
பர்லியார் (நீலகிரி), கன்னியாகுமரி (கன்னியாகுமரி), அணைகெடங்கு (கன்னியாகுமரி), சிட்டம்பட்டி (மதுரை), ஆலங்குடி (புதுக்கோட்டை), அழகரை எஸ்டேட் (நீலகிரி), மதுரை விமானநிலையம் (மதுரை), கமுதி (ராமநாதபுரம்), விரகனூர் அணை (மதுரை), திண்டுக்கல் (திண்டுக்கல்), சுருளக்கோடு (கன்னியாகுமரி), மைலாடி (கன்னியாகுமரி), திருமயம் (புதுக்கோட்டை), தக்கலை (கன்னியாகுமரி), ஆதார் எஸ்டேட் (நீலகிரி), சேரன்மகாதேவி (திருநெல்வேலி) தலா 1 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
வட தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை விட 2° – 3° செல்சியஸ் அதிகமாக இருந்தது. தென் தமிழகத்தில் இயல்பை ஒட்டி இருந்தது. அதிக பட்ச வெப்பநிலை ஈரோட்டில் 40.0° செல்சியஸ், திருப்பத்தூரில் 39.8° செல்சியஸ் பதிவாகியுள்ளது. வட தமிழக கடலோரப் பகுதிகள், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் 31° – 36° செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 20° – 30° செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 35.6° செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 34.7° செல்சியஸ் பதிவாகியுள்ளது. தென் தமிழகப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று தென் தமிழகம், வட தமிழக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள்,
டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். நாளை தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் 15 ஆம் தேதி தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும்,
காரைக்கால் பகுதியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த ஐந்து தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் படிப்படியாக 2° – 3° செல்சியஸ் உயரக்கூடும்.
இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலை வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் 2° – 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 37°–40° செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் 34°–38° செல்சியஸ் இருக்கக்கூடும். 15 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் 2° – 4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 38°–41° செல்சியஸ் இருக்கக்கூடும். இன்று முதல் 17 ஆம் தேதி வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80 % ஆகவும் இருக்கக்கூடும்.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கையைப் பொறுத்தவரை இன்று குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் தெற்கு கேரள கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.