மேட்டூர் அணை நீர்வரத்து 4,431 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணை நீர்வரத்து 4,431 கன அடியாக  அதிகரிப்பு

மேட்டூர் அணை 

மேட்டூர் அணை நீர்வரத்து 4,431 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணை நீர்வரத்து 4,431 கன அடியாக சற்று அதிகரிப்பு. இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 64.64அடியாக உயர்ந்துள்ளது.

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3760கன அடியிலிருந்து வினாடிக்கு 4431 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 28.26 டிஎம்சியாக உள்ளது.

Tags

Next Story