கரூரில் 450 கிலோ செருப்பு விசாரணைக்காக எடுத்து வைப்பு!!

கரூரில் 450 கிலோ செருப்பு விசாரணைக்காக எடுத்து வைப்பு!!
X

karur stampede slipper

கரூரில் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி காலணிகளை விட்டு சென்றதை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் சேகரித்து பாதுகாப்பாக வைத்துள்ளனர். சுமார் 450 கிலோ எடையிலான அந்த செருப்புகள் விசாரணைக்கு தேவைப்படும் என பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

கரூரில் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி காலணிகளை விட்டு சென்றதை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் சேகரித்து பாதுகாப்பாக வைத்துள்ளனர். சுமார் 450 கிலோ எடையிலான அந்த செருப்புகள் விசாரணைக்கு தேவைப்படும் என பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வேலுச்சாமிபுரத்தில் தவெகாவின் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் விஜயை பார்க்க வந்தவர்கள் நெரிசலில் சிக்கியதில் 41 பேர் உயிரிழந்தனர். 160க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்கள் விட்டுச் சென்ற காலணிகள் வேலுச்சாமி புரத்தில் ஈரோடு சாலை மற்றும் சாலையின் ஓரத்தில் காலணிகள் சிதறி கிடந்தன. முதல்கட்டமாக சாலையில் இருந்த காலணிகளை சாலையோரத்தில் அப்புறப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது. பல்வேறு குழுக்கள் பார்வையிட்டுச் சென்ற பின்னர் இறுதியாக சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆய்வு செய்த பிறகு நேற்று அந்த காலணிகள் 2ம் கட்டமாக அப்புறப்படுத்தப்பட்டன. அந்த காலணிகளை கரூர் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு, குப்பை சேகரிக்கும் வாகனத்தில் ஏற்றி பாலம்மாள் புரத்தில் உள்ள குப்பை சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. நேற்று சேகரித்த காலணிகளின் எடை சுமார் 450 கிலோ இருக்கும் என்றும், அவற்றை அடுத்த கட்ட விசாரணைக்கு தேவைப்படும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அலுவலர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Next Story