பொள்ளாச்சிக்கு எடப்பாடியார் வருகை... திமுக சார்பில் கோவிலில் சிறப்பு பூஜை!!

DMK

DMK
பொள்ளாச்சி பகுதிக்கு எடப்பாடியார் வருவதால் அவர் வருகிற 10ஆம் தேதியன்று பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி மற்றும் அருகில் உள்ள சாலைகளில் ஆம்புலன்சில் செல்லும் அளவுக்கு எந்த வாகன விபத்தும் நடைபெறக்கூடாது மற்றும் இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் யாருக்கும் ஆம்புலன்ஸ்ல் கொண்டு செல்லும் அளவுக்கு உடல்நலக்குறைவு வந்துவிடக்கூடாது என்று இன்று 7ஆம்தேதி பெளர்ணமி தினத்தில் காலை 11மணிக்கு ஆணைமலை மாசாணியம்மன் கோவிலில் கோவை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக தென்றல் மணிமாறன் தலைமையில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தனம் தங்கதுரை, ஆனைமலை பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர் முகமது நபீஸ், ஆனைமலை வடக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அஸ்வின், பொள்ளாச்சி நகர இளைஞரணி துணை அமைப்பாளர் பாலமுருகன், பொள்ளாச்சி நகர தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ் பிரபு, பொள்ளாச்சி நகர மாணவரணி துணை அமைப்பாளர் கு.மரேந்திரன், ஜே சதிஷ், தொழிற்சங்கம் தாஸ் பிரபு, சபரி துரை, சுதீஷ் ராஜ், ஊத்துக்குளி அரவிந்த், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் ஆனந்த், சிம்பு , கிருஷ்ணா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


