திருப்பரங்குன்றம்:நலத்திட்ட உதவிகள் வழங்கிய கிருத்திகா தங்கபாண்டியன்
மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சேடபட்டி மு. மணிமாறன் தலைமையில், திருப்பரங்குன்றம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வீ. பெரியசாமி மற்றும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சிவகாசி த. வனராஜா ஆகியோர் முன்னிலையில் இந்த விழா நடைபெற்றது.
மதுரை தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளர் கிருத்திகா தங்கபாண்டியன் ஏற்பாட்டில், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் சாதனைகள் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து, நாகமலைப் புதுக்கோட்டை ஊராட்சியில் 4,000 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 1,35,000 குடும்பங்களுக்கு தொடர்ச்சியாக நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை கிட்டத்தட்ட, ஒரு லட்சம் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில், நாகமலை புதுக்கோட்டை ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி மாரிமுத்து, மதுரை தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள், திமுக மகளிர் அணி நிர்வாகிகள், கழக முன்னோடிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


