சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு!!

சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு!!
X

gold

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.75,000க்கு விற்பனையாகிறது.

சர்வதேச சந்தை நிலவரங்கள், ரஷ்யா - உக்ரைன் போர், இஸ்ரேல் - ஈரான் போர் உள்ளிட்ட உலக நாடுகளில் நிகழும் அசாதாரண சூழல், டாலருக்கு நிகராண இந்தியா ரூபாயின் மதிப்பு ஆகியவை காரணமாக தங்கம் விலை அதிரடியாக ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. அதிலும் இந்தியாவில் தங்கத்திற்கு எப்போதுமே மவுசு அதிகம் தான். உலகளவில் தங்கம் சிறந்த சேமிப்பாகவும், சிறந்த முதலீடாகவும் பார்க்கப்படுவதால் அதன் விலை கணிசமாக ஏற்றம் கண்டு வருகிறது. அந்தவகையில் கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்தது. அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை (ஆக8 ) அன்று சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சமாக ஒரு சவரன் ரூ.75,760க்கும் ஒரு கிராம் ரூ.9,470க்கும் விற்பனையானது. தொடர்ந்து சனிக்கிழமை(ஆக 9) சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.75,560க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கம் விலை மேலும் சவரனுக்கு ரூ.560 குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் ரூ.75,000க்கும் , ஒரு கிராம் ரூ.9,375க்கும் விற்பனையாகிறது. அதேநேரம் சில்லறை விற்பனையில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.127க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Next Story