தங்கம் விலையின் வரலாறு காணாத உச்சம்..! சவரன் ரூ.81 ஆயிரத்தை கடந்தது!!

தங்கம் விலையின் வரலாறு காணாத உச்சம்..! சவரன் ரூ.81 ஆயிரத்தை கடந்தது!!
X

gold

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

சென்னையில் கடந்த 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.10,005 என்ற புதிய உச்சத்தை அடைந்தது. அதாவது ஒரு சவரன் தங்கம் விலை ரூ.80 ஆயிரத்து 40-க்கு விற்பனையானது. இது இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய வைத்தது. நேற்று முன்தினம் விடுமுறை தினம் என்பதால் அதே விலை நீடித்தது. நேற்று காலையில் தங்கம் விலை சற்று குறைந்தது. அதாவது கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.9,970-க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து சவரன் ரூ.79 ஆயிரத்து 760-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று மாலை தங்கம் விலை மீண்டும் புதிய உச்சத்தை தொட்டது. கிராமுக்கு ரூ.90-ம்,சவரனுக்கு ரூ.720-ம் அதிகரித்தது. அதன்படி ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 60-க்கும், சவரன் ரூ.80 ஆயிரத்து 480-க்கும் விற்பனையானது. இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ. 90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ.81,200-க்கு விற்பனையாகிறது. வெள்ளிவிலையில் இன்று மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.140-க்கும், கிலோ ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் என்று வியாபாரிகள் கருத்து தெரிவித்து உள்ளனர். தங்கம் விலை உயர்வு நடுத்தர மக்களையும், இல்லத்தரசிகளையும் கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது.

Next Story