ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: வரும் ஜனவரி 9-ம் தேதி கடைகள் வழக்கம் போல் செயல்படும்!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: வரும் ஜனவரி 9-ம் தேதி கடைகள் வழக்கம் போல் செயல்படும்!!
X
வரும் ஜனவரி 9-ம் தேதி கடைகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே அரசு ஊழியர்களுக்காக TAPS (Tamil Nadu Assured Pension Scheme) எனும் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ள நிலையில், தற்போது பொதுமக்களுக்காகப் பொங்கல் பரிசுத் தொகையை உயர்த்தி அறிவித்துள்ளது. மாநிலம் கடும் நிதிச்சுமையில் இருந்தபோதிலும், பொதுமக்களின் நலன் கருதி பொங்கல் ரொக்கப் பரிசு வழங்க நிதித்துறை பச்சைக்கொடி காட்டியுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 3,000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட 2,500 ரூபாயே இதுவரை அதிகபட்ச தொகையாக இருந்த நிலையில், தற்போது அதனை மிஞ்சும் வகையில் 3,000 ரூபாயைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

நிதி ஒதுக்கீடு மற்றும் பயனாளிகள் விவரம்:

இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள 2.22 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற உள்ளனர். இதற்காகத் தமிழக அரசு ஒதுக்கியுள்ள நிதி விவரம் வருமாறு:

பொங்கல் பரிசு மற்றும் ரொக்கத் தொகையை வழங்க அரசு விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. வங்கிகளில் இருந்து புதிய 500 ரூபாய் நோட்டுகள் பெறப்பட்டு, ஒவ்வொரு அட்டைதாரருக்கும் தலா 6 நோட்டுகள் (₹3,000) வழங்கப்படவுள்ளன.

தொடக்கம்: வரும் ஜனவரி 8-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.

சிறப்பு வேலைநாள்: வழக்கமாக வெள்ளிக்கிழமை நியாய விலைக் கடைகளுக்கு விடுமுறை என்றாலும், பொங்கல் விநியோகத்திற்காக வரும் ஜனவரி 9-ம் தேதி (வெள்ளி) கடைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலக்கு: வரும் ஜனவரி 13-ம் தேதிக்குள் அனைத்து அட்டைதாரர்களுக்கும் பரிசுத் தொகுப்பு மற்றும் பணத்தை வழங்கி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக இலவச வேட்டி, சேலை மற்றும் மளிகைப் பொருட்கள் ஏற்கனவே குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கூட்டுறவு சங்க ஊழியர்கள் மூலம் பணத்தைச் சரியான முறையில் நியாய விலைக் கடைகளுக்குக் கொண்டு செல்லும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Next Story