ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல்; 9ஆம் தேதி காலை தீர்ப்பு!!

ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல்; 9ஆம் தேதி காலை தீர்ப்பு!!
X
ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக் கோரிய வழக்கின் தீர்ப்பு படம் ரிலீஸ் தேதியான ஜனவரி 9 ஆம் தேதி காலை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய்,நடிகை பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடிப்பில் ஜனநாயகன் திரைப்படம் உருவாகி உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி வரும் 9ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுவரை ஜனநாயகன் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. படத்திற்கான அனைத்து பணிகளையும் முடித்து கடந்த மாதம் தணிக்கைக்காக படக்குழு அனுப்பியது. தொடர்ந்து டிசம்பர் 19-ஆம் தேதி படத்தை பார்த்த தணிக்கைக்குழு, சில காட்சிகளை நீக்கவும், சில வசனங்களை மியூட் செய்யவும் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. படம் பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் கூறிய மாற்றங்களை செய்து தயாரிப்பு நிறுவனம் மீண்டும் அனுப்பிய நிலையிலும், படத்திற்கு இன்னும் தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை. படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தணிக்கைச்சான்று கிடைக்பெறததால் பட தயாரிப்பு நிறுவனமான கே. வி. என் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி, ஜனநாயகன் படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்ப வேண்டும் என டிசம்பர் 29ஆம் தேரி முடிவெடுத்த பின்னர், அதை ஏன் தாமதமாக ஜனவரி 5ஆம் தேதி மனுதாரருக்கு தெரிவிக்கப்பட்டது எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு மறு ஆய்வு குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் குறித்து முடிவெடுப்பது போன்ற நடைமுறைகள் இருந்ததால் கால தாமதமானது, மறு ஆய்வு குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், விரைவில் மறு தணிக்கை செய்யப்படும் என்றும் சென்சார் போர்டு தரப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைக் கேட்ட பட தயாரிப்பு நிறுவனம், படத்தை முதலில் பார்த்த குழுவினர், ஜனநாயகன் படத்திற்கு ரூ.500 கோடி முதலீடு செய்துள்ளோம், வழக்கமாக ஒரு வாரத்தில் சான்றிதழ் வழங்கப்படும். சென்சார் குழுவின் ஒரு உறுப்பினர் எவ்வாறு புகார் அனுப்ப முடியும்? தணிக்கை குழு உறுப்பினர்களில் ஒருவர்தான் புகார்தாரர் என்பது இப்போது தான் எங்களுக்குத் தெரியும் ஒரு மனதாக சான்று வழங்க முடிவு செய்தனர். அதன்பின்னர் தனிப்பட்ட புகார் அளிக்க முடியாது. பெரும்பான்மை உறுப்பினர்கள் படத்துக்கு சான்று வழங்க பரிந்துரைத்துள்ளனர். பெரும்பான்மை இல்லாவிட்டால் மட்டுமே மறு ஆய்வு செய்ய முடியும். ஒரு உறுப்பினர் எப்படி பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவை செல்லாது என கூற முடியும்? சட்டத்திற்கு உட்பட்டு தணிக்கை வாரியம் செயல்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை என வாதத்தை முன்வைத்தனர். மறு ஆய்வுக்கு அனுப்பிய முடிவு மத்திய அரசின் முடிவல்ல, இந்த விவகாரத்தில் சென்சார் போர்டு தலைவர் மட்டுமே தனது அதிகாரத்தை செயல்படுத்தியுள்ளார் என சென்சார் போர்டு தரப்பு விளக்கம் அளித்தது. இதனை கேட்ட நீதிபதி, ஜனநாயகன் தணிக்கை சான்று வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார். இதனால் திட்டமிட்டப்படி படம் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது.

Next Story