+1 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முக்கிய தகவல் !!

+1 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முக்கிய தகவல் !!

மறுகூட்டல்

தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 4ம் தேதி தொடங்கி நடைபெற்றது. அந்தவகையில், 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் 11ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர். 11ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் கடந்த மே 14ம் தேதி வெளியாகியிருந்தது. சென்னை பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்கத்தில் இந்த ரிசல்ட் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், பிளஸ் 1 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களுடைய விடைத்தாள் நகல்களை நாளை பிற்பகல் 3 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 1 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் நாளை பிற்பகல் 3 மணி முதல் விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்த பிறகு வரும் 31ம் தேதி மறுகூட்டல்-II/மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.

www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் Application for Retotalling / Revaluation என்ற பக்கத்தை கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதனை பூர்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து உரிய கட்டணத்துடன் மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் மே 31 (வெள்ளிகிழமை) காலை 11 மணி முதல் ஜூன் 4 (செவ்வாய்கிழமை) மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

கட்டண விவரம்: மறுமதிப்பீடு: பாடம் ஒவ்வொன்றிற்கும் ரூ.505

மறுகூட்டல்-II

உயிரியல்-ரூ.305

மற்ற பாடங்கள் ஒவ்வொன்றிற்கும்- ரூ.205

Tags

Next Story