+1 தேர்வு முடிவுகள் வெளியிடு - தமிழகத்தில் 91.17% பேர் தேர்ச்சி !!!

+1 தேர்வு முடிவுகள் வெளியிடு - தமிழகத்தில் 91.17% பேர் தேர்ச்சி !!!

+1 தேர்வு முடிவுகள் வெளியிடு

தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி விட்ட நிலையில் இன்று பிளஸ் 1 பொது தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 91.17 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த ஆண்டு கடந்த மார்ச் 4ஆம் தேதி தொடங்கிய +1 பொது தேர்வு மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 7,534 பள்ளிகளில் இருந்த மொத்தம் 8.25 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.

மார்ச் 25ஆம் தேதி வரை தேர்வுகள் நடந்த நிலையில் அதன் பிறகு விடைத்தாள்களை திருத்தும் பணி நடைபெற்றது.

+1 தேர்வு முடிவுகள் லோக்சபா தேர்தல் இருப்பதால் பொது தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதமாகலாம் என சொல்லப்பட்டன இருப்பினும் அது போல எதுவும் நடக்கவில்லை ஏற்கனவே பத்து மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியானது.

இன்று காலை 9.30 மணிக்கு 11 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகிறது. தேர்வுமுடிவுகளை மாணவர்கள்dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in தளங்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த தளங்களுக்குச் சென்று அதில் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் என்பதை கிளிக் செய்து அதில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டால் ரிசல்ட் பார்த்துக் கொள்ளலாம்.

அதேபோல ரிசல்ட் மொபைல் எண்களுக்கு நேரடியாக sms எஸ் மூலம் அனுப்பவும் பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மொத்தம் 8.25 லட்சம் பேர் +1 பொது தேர்வு எழுதிய நிலையில் அவர்களில் 7,39539 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மாநிலத்தில் தேர்ச்சி விகிதம் 91.17 ஆக உயர்ந்துள்ளது. இதில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 87.26 சதவீதமாக உள்ள நிலையில் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 94.69 ஆக உயர்ந்துள்ளது.

11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 96.02 சதவீதத்துடன் தேர்ச்சி பெற்று கோவை முதலிடத்தை பெற்றுள்ளது. அது போல் சதவீதம் தேர்ச்சி பெற்று வேலூர் கடைசி இடம் பிடித்துள்ளது.

கோவை 96.02%, ஈரோடு 95.56% ,திருப்பூர் 95.23% ,விருதுநகர்- 95.06% ,அரியலூர்- 94.96% ,பெரம்பலூர் 94.82%, சிவகங்கை 94.57%, திருச்சி 94.00% ,கன்னியாகுமரி 93.96% ,தூத்துக்குடி 93.86% ,கடலூர்- 91.01% ,செங்கல்பட்டு 90.85% ,தருமபுரி- 90.49% ,தேனி 90.08%, திண்டுக்கல் 89.97% ,விழுப்புரம் 89.41% திருவண்ணாமலை 89.41% ,தஞ்சை- 89.07% திருவண்ணாமலை 88.91% ,புதுக்கோட்டை 88.02% ராணிப்பேட்டை 87.86% ,கள்ளக்குறிச்சி 86.00% ,திருவள்ளூர் 85.54% ,வேலூர் 81.40% ,புதுவை- 97.89 % காரைக்கால்- 96.27%.

இன்று முதல் மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை 2 ஆம் தேதி முதலி் மறுதேர்வு நடத்தப்படுகிறது.







Tags

Next Story