10 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை - பக்கத்து வீட்டுக்காரர் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை
பூந்தமல்லி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பக்கத்து வீட்டுக்காரரை போலீசார் போக்ஸோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்
பூந்தமல்லி குமணன்சாவடியிலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு, தன்னுடைய பத்து வயது மகளுடன் பெண் ஒருவர் வந்தார். அவர் தன்னுடைய மகளுக்குப் பக்கத்து வீட்டில் வசிக்கும் ராஜகோபால் என்பவர் பாலியல் தொல்லைக் கொடுத்ததாகப் புகாரளித்தார். அதன்பேரில் அனைத்து மகளிர் போலீஸார் குற்றம்சாட்டப்பட்ட ராஜகோபாலிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர், சிறுமிக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து ராஜகோபாலை போக்சோ சட்டத்தின்கீழ் போலீஸார் கைதுசெய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். இது குறித்து போலீஸார் பேசுகையில், ``பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பத்து வயதாகுகிறது. சம்பவத்தன்று அவர் ராஜகோபாலின் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அங்கு யாரும் இல்லை. அதனால் சிறுமியிடம் பேச்சுக் கொடுத்த ராஜகோபால், தனிமையைப் பயன்படுத்தி அவருக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்திருக்கிறார். இந்தச் சம்பவத்தை வெளியில் எங்கும் சொல்லக் கூடாது என ராஜகோபால் சிறுமியை மிரட்டியிருக்கிறார். இருப்பினும் வீட்டுக்கு வந்த சிறுமி, தனக்கு நடந்த கொடுமையைக் கண்ணீர்மல்க அவரின் அம்மாவிடம் தெரிவித்திருக்கிறார். அதன்பேரில், ராஜகோபாலிடம் விசாரணை நடத்தி, அவரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்திருக்கிறோம் என தெவித்தார்.
Next Story