100 சதவீதம் வாக்காளிக்க காய்கனிகள் மூலம் கோலமிட்டு விழிப்புணர்வு !
விழிப்புணர்வு
மக்களவைத் தேர்தலில் நூறு சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, அரியலூர் அடுத்த வாலாஜா நகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் காய், கனிகள் மூலம் கோலமிட்டு தேர்தல் விழிப்புணர்வு நடைபெற்றது
அரியலூர், மார்ச் 23 - மக்களவைத் தேர்தலில் நூறு சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, அரியலூர் அடுத்த வாலாஜா நகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில், காய், கனிகள் மூலம் கோலமிட்டு தேர்தல் விழிப்புணர்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அங்கன்வாடி பணியாளர்கள், காய், கனிகள் மூலம் கோலமிட்டும், சிற்பங்களை செதுக்கியும் எனது வாக்கு எனது எதிர்காலம், நமது வாக்கு நமது உரிமை, 100 சதவீதம் வாக்களிப்போம், என் வாக்கு என் உரிமை, நல்லாட்சி அமைய வாக்களிப்போம், வாக்களிப்பது ஜனநாயக கடமை, நோட்டுக்கு இல்லை ஓட்டு, எங்கள் வாக்கை விற்க மாட்டோம் உள்ளிட்ட வாசகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியினை மாவட்ட வருவாய் அலுவலர் ம.ச.கலைவாணி பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் லெட்சுமணன், வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், தேர்தல் விழிப்புணர்வு அலுவலர் ராமலிங்கம், மாவட்ட சமூக நல அலுவலர் அனுராபு நடராஜர் மணி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் அன்பரசி, அரியலூர் வட்டாட்சியர் ஆனந்தவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதே போல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மூன்றாம் பாலனி வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மகளிர் சுய உதவிக் குழுவினர் ரங்கோலி கோலமிட்டு தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
Next Story