100% வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு
ஜெயங்கொண்டம் நகராட்சி சார்பில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் 100% வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அரியலூர், மார்ச்.27- நாடாளுமன்ற பொது தேர்தல் -2024 சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி ஜெயங்கொண்டம் நகராட்சியில், அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுரையின் பேரில் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.வாக்காளர்கள் 100% தவறாமல் வாக்களிப்போம் வாரீர் வாக்காளர் என்பதில் பெருமைப்படுவோம், நாம் வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம் " ஏப்ரல் 19ஆம் தேதி அனைவரும் 100% தவறாமல் வாக்களிப்போம் என்று விழிப்புணர்வு பிரச்சாரம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது . இந்த நிகழ்ச்சிகளுக்கு ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் அசோக் குமார் தலைமை வகித்தார். அரியலூர் நகராட்சி ஆணையர் மகேஸ்வரி முன்னிலை வகித்தார் ஜெயங்கொண்டம் நகராட்சி பொறியாளர் ராஜகோபாலன், மேலாளர் அன்புச்செல்வி, துப்புரவு ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் அன்னை தெரசா நர்சிங் கல்லூரி மாணவிகள்,துப்புரவு மேற்பார்வையாளர்கள், களப்பணி உதவியாளர்,தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர்கள்,பொதுமக்கள் ஆகியோர் பெருமளவில் கலந்து கொண்டனர்
Next Story