ஜெயங்கொண்டத்தில் 100%வாக்களிக்க பயணிகளிடம் துண்டுபிரசுரம் வழங்கல்
பேருந்தில் ஸ்டிக்கர் ஒட்டிய ஆட்சியர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் மாவட்ட கலெக்டர் மக்களவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பஸ்களில் ஒட்டு வில்லைகள் ஒட்டியும், பயணிகளிடம் துண்டு பிரசுரம் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மக்களவைத் தேர்தலில் நூறு சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ஜ.ஆனிமேரி ஸ்வர்ணா, பொதுமக்களுக்கு துண்டு பிரசுங்களை வழங்கினார்.
தொடர்ந்து அவர், பஸ் கண்ணாடிகளில் விழிப்புணர்வு ஓட்டு வில்லையை ஓட்டியும், பஸ்களில் பயணித்த பயணிகளிடம் கட்டாயம் மக்களவைத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மாவட்ட கலெக்டர் வழங்கிய விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரத்தை பயணிகள் ஆர்வத்துடன் வாங்கிக்கொண்டு வாக்களிப்பதாக தெரிவித்தனர். நிகழ்ச்சியில், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, தேர்தல் விழிப்புணர்வு அலுவலர் ராமலிங்கம், ஜெயங்கொண்டம் தாசில்தார் கலிலூர்ரகுமான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.