100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரச மரம்; சாலையில் விழுந்து பாதிப்பு

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரச மரம்; சாலையில் விழுந்து பாதிப்பு

ஆற்காடு அருகே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரச மரம் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரச மரம் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் ஆற்காடு அடுத்த சப்தகன்னி அம்மன் ஆலயம் அருகே நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அரச மரம் தொடர் மழை காரணமாக திடீரென ஆற்காடு - செய்யார் சாலை நடுவே சாய்ந்தது.

இதன் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மரம் அருகில் இருந்த மின் மின்கம்பகளின் மீது விழுந்ததால் மின்சார கம்பி அறுந்து 7 மின் கம்பங்கள் சேதமடைந்தது இதன் காரணமாக அப்பகுதி சுற்றுவட்டார பகுதியில் மின்தடை ஏற்பட்டது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த ஆற்காடு தீயணைப்பு துறையினர் ,ஆற்காடு நகராட்சி ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு மாற்று பாதையில் வாகனங்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டது மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட பகுதியை ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜே எல் ஈஸ்வரப்பன் நேரில் சென்று மரத்தை அகற்றும் பணிகளை பார்வையிட்டு துரிதமாக மரத்தை அப்புறப்படுத்த அறிவுறுத்தினார்.

இதனை அடுத்து பல மணி நேர போராட்டத்திற்கு பின்பு மரம் சாலையிலிருந்து துண்டு துண்டாக வெட்டி அகற்றப்பட்டது இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags

Next Story