காஞ்சிபுரத்தில் 1,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு

காஞ்சிபுரத்தில் 1,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு

நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் 

மிக்ஜாம்' புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், வாலாஜாபாத், உத்திரமேரூர், காஞ்சிபுரம் என ஐந்து வட்டாரங்களிலும் பெய்த கனமழை காரணமாக, மழைநீர் சூழ்ந்து ஆயிரக்கணக்கான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. வரதராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட 1,000 ஏக்கருக்கு மேலான விவசாயம் சார்ந்த பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ராயப்பா நகர், புவனேஸ்வரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் சிக்கியவர்களை, தேசிய பேரிடர் மீட்பு படையினர் படகுகள் மூலம் மீட்டனர்.

ஸ்ரீபெரும்புதுார் காங்., - எம்.எல்.ஏ., செல்வபெருந்தகையின் டிராக்டரில் அமர்ந்தபடி அமைச்சர் முத்துசாமி, மழை பாதித்த பகுதிகளை, நேற்று மாலை நேரில் ஆய்வு செய்தார். மாவட்ட கண்காணிப்பு அலுவலர் செந்தில்குமார், கலெக்டர் கலைச்செல்வி ஆகியோர் உடன் இருந்தனர். காஞ்சிபுரம் அருகே கீழ்கதிர்பூரில் மழைநீர் செல்லும் கால்வாய் துார்ந்துள்ளதால், கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழை நீர், விவசாய நிலங்களில் புகுந்து நெற்பயிர்களை மூழ்கடித்தன.

Tags

Next Story