மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு ரூ.100.34 கோடி வங்கிக்கடன்
ஈரோட்டில் நடந்த விழாவில் 2337 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு .100 கோடியே 34 லட்ச ரூபாய் வங்கி கடன் , மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனம் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
ஈரோடு அடுத்துள்ள சோலார் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் 2337 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.100 கோடியே 34 லட்ச ரூபாய் வங்கி கடன் வழங்குதல், மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனம் வழங்குதல் , பல்வேறு துறையின் சார்பில் 9948 பயனாளிகளுக்கு ரூ.70 கோடியே 56 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்குதல் , புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் முடிவுற்ற பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. இதில் தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று மகளிர் சுய உதவிக்குழுக்களுக்குளுக்கு கடன் உதவி வழங்கி , நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
Next Story