தமிழகத்தில் கடந்த நிதி ஆண்டில் 10,213 வழக்குகள் பதிவு
கோப்பு படம்
தமிழகத்தில் கடந்த நிதி ஆண்டின் கஞ்சா ,பிற போதைப் பொருள் விற்பனை தொடர்பாக 10,213 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 22,969 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது- மதுவிலக்கு, ஆயத்தீர்வை கொள்கை
தமிழகத்தில் கடந்த 2023- 24 நிதி ஆண்டில் கஞ்சா மற்றும் பிற போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மொத்தம் 10,213 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 22,969 கிலோ கஞ்சாவும் 246 கிலோ கஞ்சா சாக்லேட் கைப்பற்றப்பட்டது.
இவை தவிர மற்ற போதைப் பொருட்களான இபுபுரூபன் 101 கிலோ , எப்பிட்ரின் 18 கிலோ , மெத்தம்பட்டமைன் 7 கிலோ , ஹெராயின் 953 கிராம் மயக்கமூட்டும் மாத்திரைகள் 56,460 கைப்பற்றப்பட்டதாக கொள்கை குறிப்பில் தகவல் வெளியிடப்பட்டது .
இந்த தொடர்பாக நான்கு வெளிநாட்டவர் உட்பட 14,447 பேர் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தொடர்பாக 15,642 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1 லட்சத்தை 47 ஆயிரத்து 130 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
Next Story