மீனாட்சி அம்மன் கோவில் உண்டியல் காணிக்கை 1.08 கோடி வரவு

மீனாட்சி அம்மன் கோவில் உண்டியல் காணிக்கை 1.08 கோடி வரவு

உண்டியல் பணத்தை எண்ணும் பக்தர்கள் 

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக 1.08 கோடி செலுத்தியிருந்தனர்.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் அதன் துணை கோயில்களின் உண்டியல்கள் கோவில் இணை ஆணையர் கிருஷ்ணன் முன்னிலையில் நேற்று திறந்து எண்ணப்பட்டன.உதவி ஆணையர், மீனாட்சி அம்மன் கோயிலின் தக்கரான மதுரை மண்டல இணை ஆணையரின் பிரதிநிதி, கண்காணிப்பாளர்கள், வடக்கு, தெற்கு சரக ஆய்வாளர்கள்,மாணவ மாணவியர்கள் பொதுமக்கள் பங்கேற்று காணிக்கை என்னும் பணியில் ஈடுபட்டனர். இதில் 1,08,76,77 கோடி ரொக்க பணம், பலமாற்றுப் பொன் இனங்கள் 247 கிராம், பலமாற்று வெள்ளி இனங்கள் 747 கிராம், அயல்நாட்டு நோட்டுகள் 258 பக்தர்களால் செலுத்தப்பட்டிருந்தன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story