சேலம் : தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பத்தாம் ஆண்டு விழா கொண்டாட்டம்

சேலம் : தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பத்தாம் ஆண்டு விழா கொண்டாட்டம்

தமிழ் மாநில காங்கிரஸ் 1௦ ஆண்டுகள் கொண்டாட்டம்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பத்தாம் ஆண்டு விழாவை அக்கட்சியின் உறுப்பினர்கள் விமர்சையாக கொண்டாடினர்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 10-ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி சேலம் மாநகர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. மாநகர் மாவட்ட தலைவர் கே.எம்.உலகநம்பி, தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் பெருந்தலைவர் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் மாநில இனைச் செயலாளர் மு.சின்னதுரை, பொதுச் செயலாளர் அஸ்தம்பட்டி விஷ்ணுகுமார்,பாம்பே தனம், இளைஞரணி தலைவர் சாலமன், தொழிற்சங்க தலைவர் அம்பேத்தயாளன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story