பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடக்கம்: அரியலூரில் 9,568 மாணவ, மாணவிகள் எழுதினர்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடக்கம்: அரியலூரில் 9,568 மாணவ, மாணவிகள் எழுதினர்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 

அரியலூர் மாவட்டத்தில் 9568 மாணவ மாணவிகள் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதினார்.
தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை தொடங்கிய பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வை அரியலூர் மாவட்டத்தில் 9568 மாணவ, மாணவிகள் எழுதினர். மாவட்டத்தில் 60 தேர்வு மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வில் 186 பள்ளிகளைச் சேர்ந்த 9,772 மாணவ, மாணவர்களில் 9,568 பேர் தேர்வு எழுதினர். 204 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு மணிநேரம் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. இதே போல், 3 தேர்வு மையங்களில், 204 தனித் தேர்வர்களில், 181 பேர் எழுதினர். 23 பேர் எழுத வரவில்லை. இதில், நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வை ஆட்சியர் ஜா.ஆனிமேரி பார்வையிட்டார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி, வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், வட்டாட்சியர் ஆனந்தவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தேர்வு மையங்களைக் கண்காணிக்க, முதன்மைக் கண்காணிப்பாளர்கள், கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் , கூடுதல் துறை அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர்கள் மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு பணியில் ஈடுபட்டனர். தேர்வு நாள்களில் தடையில்லா மின்சாரம், பேருந்து வசதி, தேர்வு அமைதியாக நடைபெறுவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வு மைய அறைக்குள் மாணவர்கள், அலுவலர்கள் கண்டிப்பாக கைப்பேசி கொண்டுவர தடைவிதிக்கப்பட்டன. படவிளக்கம்: அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை பார்வையிட்ட ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா.

Tags

Next Story