திருச்சி விமான நிலையத்துக்கு ரூ.117 கோடி வருவாய்
திருச்சி விமான நிலையம்
திருச்சி விமான நிலைய இயக்குநா் பி. சுப்பிரமணி கூறியதாவது,
தமிழகத்தில் குறிப்பிடும் வகையிலான செயல்பாடுகளை திருச்சி பன்னாட்டு விமான நிலையம் கடந்தாண்டு நிகழ்த்தியுள்ளது. 2023, ஜன.1-ஆம் தேதி முதல் டிசம்பா் 31-ஆம் தேதி வரையில் 12.80 லட்சம் விமானப் பயணிகளை கையாண்டுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 17 சதவீதம் கூடுதலாகும். கடந்தாண்டு ரூ. 117 கோடி வருவாய் ஈட்டப்பட்ட நிலையில், அதிகரிக்கும் பயணிகள், புதிய விமான சேவைகள் மூலம் வரும் காலங்களில் வருவாய் மேலும் அதிகரிக்கும். புதிய முனையத்தை பிரதமா் நரேந்திரமோடி அண்மையில் திறந்து வைத்துள்ளாா். இந்த முனையம் பயன்பாட்டுக்கு வரும்போது கூடுதல் விமானங்கள் இயக்கப்படுவதுடன், அதிக பயணிகளும் வந்து செல்வா். 2024ஆம் ஆண்டு என்பது திருச்சி பன்னாட்டு விமானநிலையத்துக்கு அதிக செயல்பாடுகளை எதிா்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது என்றாா்.