தமிழ்நாட்டின் அன்னிய நேரடி முதலீடு 12.44% அதிகரிப்பு!
FDI
2022-23 நிதியாண்டில் $2.17 பில்லியனாக இருந்த தமிழ்நாட்டின் அன்னிய நேரடி முதலீடுகள், 12.44% உயர்ந்து 2023-24 நிதியாண்டில் $2.44 பில்லியனாக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டின் அன்னிய நேரடி முதலீடுகள் உயர்வை சந்தித்தாலும், இந்தியாவின் ஓட்டு மொத்த FDI $46.03 பில்லியனில் இருந்து $44.42 பில்லியனாக சரிந்துள்ளது.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, இந்தியாவின் மொத்த அந்நிய நேரடி முதலீடுகளில் தமிழ்நாட்டின் பங்கு 5%-ஆக உள்ளது.
பல நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் மும்பை மற்றும் டெல்லியில் இருப்பதால், தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கான FDI-யின் குறிப்பிடத்தக்கப் பங்குகள் அந்த மாநிலங்களின் கீழ் கணக்கிடிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story