துர்க்கை அம்மன் கோவில் அருகில் 12ஆம் நூற்றாண்டு சிற்பம்

துர்க்கை அம்மன் கோவில் அருகில் 12ஆம் நூற்றாண்டு சிற்பம்

துர்க்கை அம்மன் கோவில் அருகில் 12ஆம் நூற்றாண்டு சிற்பம் 

விளாத்திகுளம் அருகே எம்.சுப்பிரமணியபுரம் என்ற ஊசிமேசியாபுரம் கிராமத்தில் துர்க்கை அம்மன் கோவில் அருகில் 12ஆம் நூற்றாண்டு பழமையான சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

விளாத்திகுளம் அருகே எம்.சுப்பிரமணியபுரம் என்ற ஊசிமேசியாபுரம் கிராமத்தில் துர்க்கை அம்மன் கோவில் அருகில் 12ஆம் நூற்றாண்டு பழமையான சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விக்கி (எ) செண்பகபெருமாள் என்பவர் அளித்த தகவலின் பேரில், தூத்துக்குடியை சேர்ந்த தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது

எனது கீழ பட்டினம்(பட்டிணமருதூர்) தொடர்பான வரலாற்று ஆய்வின் போது இந்த எம். சுப்பிரமணியபுரம் கிராமத்தில் உள்ள நினைவு கல் தொடர்பான விவரம் அறிந்து அதனை கடந்த 31ஆம் தேதி எம்.சண்முகபுரத்தினை சேர்ந்த ஆழகர்சாமி, எம்.சுப்பிரமணியபுரம் ஊரினை சேர்ந்த வன்னிய ராஜன், ஐகோர்ட் மகாராஜா, பரத் ஆகியோர் சகிதம் மண்ணில் பாதி புதைந்து இருந்த செவ்வக வடிவ கல் சிற்பத்தினை நேராக்கி சுத்தம் செய்து கூட்டாக புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்தி கொண்டனர்.

உடனே இது தொடர்பாக இந்திய தொல்லியல் துறை அதிகாரி திருச்சி, கிராம நிர்வாக அதிகாரி மற்றும் விளாத்திகுளம் வட்டாட்சியர் ஆகியோருக்கு தகவல் பரிமாற்றம் செய்து விட்டதாகவும் தெரிவித்தார். மேலும் இந்திய தொல்லியல் துறை அதிகாரி மருத்துவர். யாத்தீஸ் குமார் கூற்றுப்படி இது ஓர் நினைவு கல் என்றும், இதன் காலகட்டம் - ஆட்சியாளர் விவரம் தொடர்பானவற்றை தொல்லியல் அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்த பின்னர்தான் கூற முடியும் என்று தகவல் தெரிவித்தார். இந்த நினைவு கல்லின் தேய்மானம் மற்றும் தன்மை இவைகளை உற்று நோக்கும்போது இதன் காலகட்டம் 12ஆம் நூற்றாண்டு முதல் பதினாறாம் நூற்றாண்டு வரை இருக்கலாம்.

கையில் கொற்றக் குடை ஏந்தியவாறு ஒருவர் நிற்பதை பார்க்கும் பொழுது இந்த சிற்பங்கள் அந்த கால கட்டத்தினை சார்ந்த மன்னராகவும், ராணியாகவும் இருக்கலாம் என்றும், மன்னரின் சிகை அலங்காரத்தின் சாய்ந்த கொண்டை வடிவமைப்பை பார்க்கும் பொழுது நாயக்கர் ஆட்சி காலத்தினை போன்று தோன்றுகின்றதாகவும், எனினும் தொல்லியல் துறையினர் ஆய்விற்கு பின்பு தான் முழு விவரம் தெரியவரும். மேலும் கூடுதலாக இந்த ஊரில் உள்ள ஸ்ரீ முனியசாமி ஆலயத்தின் அருகே ஓர் கல்லறையில் உள்ள குறியீட்டுக் கல்லினை போன்றதை காண முடிந்தது. அதில் இளம்பிறையோடு கூடிய 5 மூலை கொண்ட நட்சத்திர குறியீடு உள்ளது.

இது இஸ்லாமியர்கள் இந்த பகுதியில் வாழ்ந்ததை குறிப்பிடுவதாகவும், இதற்கு சான்றாக இவ்வூரில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் மேற்கே அமைந்துள்ள அரியநாயகிபுரத்தில் அதிக அளவில் சுமார் 50 சதவீதம் அளவில் இஸ்லாமியர்கள் இன்றும் வாழ்ந்து வருவதாகவும், இவ்வூருக்கு அருகே வீரக்காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஏழு ஊருக்கு பாத்தியப்பட்ட 'ஸ்ரீ பெருமாள் ஆலயம்' ஆனது கல்தூண் விளக்கு அமையபெற்ற மிகவும் தொன்மையானது எனவும், அருகில் உள்ள தத்தனேரி கிராமத்தில் தொன்மையான கட்டிட சிதைவுகள் சில காணப்பட்டதாக ஊர்மக்கள் கூறியதையும், இந்த பகுதிகளை முறையாக வரலாறு மற்றும் தொல்லியல் ஆய்வுகள் செய்தால் மிக மிக தொன்மையான வைப்பாற்று நாகரீகம் தொடர்பான உண்மைகளை உலகுணர செய்யலாம் என்று தெரிவித்தார்.

Tags

Next Story