பொங்கல் பண்டிகை; அரசு பேருந்துகளில் 1.32 லட்சம் பேர் முன்பதிவு!!

பொங்கல் பண்டிகை; அரசு பேருந்துகளில் 1.32 லட்சம் பேர் முன்பதிவு!!

SETC

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு பேருந்துகளில் 1.32 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக பொங்கலுடன் இணைந்த 3 நாட்கள் விடுமுறையுடன் 17-ந்தேதியும் (வெள்ளிக்கிழமை) அரசு விடுமுறை விடப்பட்டு உள்ளதால் 6 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. இதனால் வெளியூர் செல்லக்கூடியவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக சிறப்பு பஸ்கள் நாளை (10-ந்தேதி) முதல் 13-ந்தேதி வரை 4 நாட்கள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து மொத்தம் 14 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. வழக்கமாக இயக்கப்படும் 8368 பஸ்களுடன் சிறப்பு பஸ்கள் 5736 இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோயம்பேடு, மாதவரம், கிளாம்பாக்கம் ஆகிய 3 பஸ் நிலையங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கிடையில் அரசு பஸ்களில் பயணம் செய்ய முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ரெயில்கள் அனைத்தும் நிரம்பி விட்டதால் தற்போது அரசு பஸ்களில் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சொந்த ஊர் செல்வதற்கு முன்பதிவு செய்து வருகின்றனர். இன்று காலை நிலவரப்படி ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் அரசு பஸ்களில் பயணிக்க முன்பதிவு செய்திருப்பதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதில் சென்னையில் இருந்து மட்டும் 80 ஆயிரம் பேர் சொந்த ஊர்களுக்கு செல்ல டிக்கெட் பெற்றுள்ளனர். நாளை (10-ந்தேதி) பயணம் செய்ய 38 ஆயிரம் பேர், 11-ந்தேதி 41 ஆயிரம் பேர், 12-ந்தேதி 24 ஆயிரம் பேர், 13-ந்தேதி 25 ஆயிரம் பேர் பயணிக்கிறார்கள். நாளை முதல் முன்பதிவு செய்வோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டை விட இந்த வருடம் சொந்த ஊர்களுக்கு அதிகளவில் மக்கள் பயணம் செய்கிறார்கள். பெரும்பாலான பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை வரை வகுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. 11-ந்தேதி முதல் பொங்கல் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதனால் பஸ், ரெயில், ஆம்னி பஸ்களில் லட்சக்கணக்கானவர்கள் முன்பதிவு செய்து பயணத்தை தொடங்குகின்றனர்.

Tags

Next Story