சேலம் பத்மவாணி மகளிர் கல்லூரியில் 141-வது பாரதியார் பிறந்தநாள் விழா

சேலம் பத்மவாணி மகளிர் கல்லூரியில் 141-வது பாரதியார் பிறந்தநாள் விழா

சேலம் பத்மவாணி மகளிர் கல்லூரியில் 141-வது பாரதியார் பிறந்தநாள் விழா

மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்
சேலம் பெரியார் பல்கலைக்கழகம் எதிரில் உள்ள பத்மவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாரதியாரின் 141-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி கல்லூரி வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட பாரதியாரின் உருவ படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. பத்மவாணி மகளிர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.சத்தி மூர்த்தி, செயலாளர் கே.துரைசாமி, இயக்குனர் இசைவாணி சத்தியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பாரதியார் உருவ படத்திற்கு மலர் தூமரியாதை செலுத்தினர். கல்லூரி முதல்வர் ஹரிகிருஷ்ணராஜ் , பத்மவாணி மகளிர் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் பெ.முத்துக்குமார், செயல் அலுவலர் ரமேஷ் துணை முதல்வர் பழனியம்மாள், அனைத்து துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், கல்லூரி மாணவிகள் பாரதியாரின் முகமூடி அணிந்து அவரது புகழை பாடினர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

Tags

Next Story