15 நாட்களாக நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் தனியார் வியாபாரிகள் குறைந்த விலைக்கு கொள்முதல்
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா பெருஞ்சேரி பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு பெருஞ்சேரி, கிளியனூர், வல்லம், அரிவேளூர், பண்டாரவடை, சுந்தரப்பன்சாவடி, மலக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 700 ஏக்கருக்கு மேல் சம்பா தாளடி சாகுபடி செய்யப்பட்டு அறுவடை பணி தற்போது தொடங்கி உள்ளது.
அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் பெருஞ்சேரி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொண்டு வந்து கொட்டியும், வாடகைக்கு தார்படுதாய் வாங்கி மூடியும் வெயில் மற்றும் பனியிலும் நெல்லை பாதுகாத்தும் வருகின்றனர்.
ஆனால் இப்பகுதியில் அறுவடை தொடங்கி 20 நாட்களுக்கு மேலாகியும் இந்த கொள்முதல் நிலையம் திறக்காததால், கொள்முதல் நிலையத்தில் நெல்லை கொட்டி பாதுகாத்து வந்த விவசாயிகள் ஒருசிலர் கொள்முதல் நிலையத்திற்கு தனியார் வியாபாரியை வரவழைத்து குறைந்தவலைக்கு நெல்லை விற்பனை செய்துவருகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் விவசாயிகளின நிலையை கருத்தில் கொண்டு விரைவில் கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தியும் பூட்டி கிடக்கும் கொள்முதல் நிலையம் வாயிலில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்