ரயில் மோதி 9 விஏஓ.,கள் பலியான வழக்கில் ரூ.1.5 கோடி இழப்பீடு

ரயில் மோதி 9 விஏஓ.,கள் பலியான வழக்கில் ரூ.1.5 கோடி இழப்பீடு

2007ஆம் ஆண்டு ரயில் மோதி 9 கிராம நிர்வாக அலுவலர்கள் உயிரிழந்த வழக்கில் ஒன்றரை கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2007ஆம் ஆண்டு ரயில் மோதி 9 கிராம நிர்வாக அலுவலர்கள் உயிரிழந்த வழக்கில் ஒன்றரை கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் கடந்த 2007-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ந் தேதி கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநாடு நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக அப்போதைய ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மினிவேனில் சென்னைக்கு சென்றனர். மாநாட்டுக்கு செல்வதற்கு முன்பாக அரக்கோணம் அருகே கோவிந்தவாடி அகரம் பகுதியிலுள்ள குருகோவிலுக்கு சென்றனர். கோவிலுக்கு செல்லும் வழியில் இருந்த ஆளில்லாத ரயில்வே கேட்டை கடக்க முயன்ற போது காஞ்சீபுரத்தில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற பயணிகள் ரயில் மினிவேன் மீது மோதியது.

இந்த விபத்தில் கிராம நிர்வாக வி.ஏ.ஓ-க்களான செல்வபாண்டியன்,தாண்டவராயன், துரைசாமி, தாமோதிரன், நந்தகுமார், வெங்கடேசன், சண்முகபரணி, மோகன், குமாரசாமி ஆகியோரும், ராமமூர்த்தி என்ற வி.ஏ.ஓ மகன் பிரவீன்குமார் (17), மினிவேன் டிரைவர் என 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த வி.ஏ.ஓ-க்கள் 12 பேரின் குடும்பத்தினர் இழப்பீடு கோரி வேலூர் 1வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் 2008-ம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.சாந்தி, பாதிக்கப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடாக ரூ.1 கோடியே 44 லட்சத்து 97 ஆயிரத்து 551 வழங்க வேண்டும் என்று தீர்ப்புக்கூறினார்.

Tags

Read MoreRead Less
Next Story