இலவச, கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் 1,57,767 பேர் தகுதி

இலவச, கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் 1,57,767 பேர் தகுதி

இலவச, கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் 1,57,767 விண்ணப்பங்கள் தகுதி பெற்றநிலையில், ஜூன் 3க்குள் அந்தந்த பள்ளிகளில் மாணவர்கள் சேர வலியுறுத்தப்பட்டுள்ளது.  

இலவச, கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் 1,57,767 விண்ணப்பங்கள் தகுதி பெற்றநிலையில், ஜூன் 3க்குள் அந்தந்த பள்ளிகளில் மாணவர்கள் சேர வலியுறுத்தப்பட்டுள்ளது.

2024-25 ஆம் ஆண்டு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த ஆண்டு தனியார் பள்ளிகள் இயக்குனர் ஏப்ரல் ஒன்றாம் தேதி வெளியிட்ட கடிதத்தின் அடிப்படையில் 84 ஆயிரத்து 765 இடங்களுக்கு ஏப்ரல் 22ஆம் தேதி முதல் மே 20ஆம் தேதி வரை ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 756 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

இவை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் அமைக்கப்பட்ட கல்வி அதிகாரிகள் கொண்ட குழுவால் மே பத்தாம் தேதி முதல் மே 27ஆம் தேதி வரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தகுதியான விண்ணப்பங்கள், தகுதியற்ற விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்கள் விடுபட்ட விண்ணப்பங்கள் என பிரிக்கப்பட்டது. மே 27 ஆம் தேதி ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 767 விண்ணப்பங்கள் தகுதியானவை என உறுதி செய்யப்பட்டன.

தொடர்ந்து மே 28ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியான விண்ணப்பங்கள் பள்ளிகளில் சேர்க்கைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 25% ஒதுக்கீட்டில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாக இருக்கும் பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு தேர்வு செய்யப்பட்ட விவரம் பெற்றோர்களுக்கு OTP எண் அனுப்பப்பட்டு சேர்க்கை உறுதி செய்யப்பட்டது. பள்ளிகளின் அறிவிப்பு பலகையிலும் மாணவர்களின் பெயர்கள் ஒட்டப்பட்டு இருக்கக்கூடிய நிலையில் ஜூன் 3 ஆம் தேதிக்குள் அந்தந்த பள்ளிகளுக்கு சென்று பள்ளி முதல்வரிடம் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்று தனியார் பள்ளிகள் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story