சென்னை வாக்கு எண்ணும் மையத்தில் காற்றுடன் பெய்த மழையின் எதிரொலியாக- 2 கேமராக்கள் செயலிழப்பு !!! உடனடியாக மாற்றம்...

சென்னை வாக்கு எண்ணும் மையத்தில் காற்றுடன் பெய்த மழையின் எதிரொலியாக- 2 கேமராக்கள் செயலிழப்பு !!! உடனடியாக மாற்றம்...

கேமராக்கள்

தென் சென்னை மக்களவைத் தொகுதி வாக்கு என்னும் மையத்தில் இரண்டு கண்காணிப்பு கேமராக்கள் பழுதாகின. இதனை அடுத்து உடனடியாக அங்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் மேற்பார்வையில் புதிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டமாக நடைபெறுகிறது. இதுவரை மூன்று கட்ட தேர்தல்கள் முடிந்துள்ளன முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 39 லோக்சபா தொகுதிகள் உள்ளிட்ட 102 இடங்களுக்கு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழ்நாடு முழுவதும் லோக்சபா தொகுதி வாரியாக வாக்கு பெட்டிகள் அனைத்து ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரி, விழுப்புரம் மற்றும் ஈரோட்டில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து தொழில்நுட்ப வல்லுநர்கள் பழுதை சரி செய்தனர்.

இந்நிலையில் தென் சென்னை லோக்சபா தொகுதியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வாக்கு என்னும் மையத்தில் திடீரென நேற்றும் நள்ளிரவில் இரண்டு சிசி டிவி கேமராக்கள் செயலிழந்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகவாளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மொத்தம் 210 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் காற்றுடன் பெய்த மழை எதிரொலியால் 210 கேமராக்களில் இரண்டு கேமராக்கள் பழுதாயின. இதனை அடுத்து உடனடியாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் மேற்பார்வையில் பழுதான கேமராக்களை அகற்றப்பட்டு புதிதாக கேமராக்களை பொருத்தப்பட்டுள்ளனர்.

Tags

Next Story