+2 தேர்வு : தமிழகத்தில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி.

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று வெளியானது, தமிழகத்தில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாநில பாடத்திட்டத்தில் 12 ஆம் வகுப்பு படித்த மாணவ மாணவிகளுக்கு இன்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வு முடிவுகளை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் துறை இயக்ககத்தில் தேர்வுகள் துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டார். மொத்தம் 7,80,550 பேர் தேர்வு எழுதினர் அதில் தேர்ச்சி பெற்றவர்கள் 7,19,196 பேர், 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் முதலிடம் 97.45 தேர்ச்சி சதவீதம் ஈரோடு, சிவகங்கை இரண்டாமிடம் 97.42 சதவீதம். அரியலூர் மூன்றாமிடம் 97.25 சதவீதம். மாற்று திறனாளி மாணவர்கள் ஒட்டுமொத்தமாக 5603 பேர் தேர்வு எழுதினர். அதில் 5161 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர், 92.11 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 4.07% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 115 சிறைவாசிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Tags

Next Story