தமிழக வெற்றி கழகத்தில் 2 லட்சம் பேருக்கு பதவி !
விஜய்
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழக கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், தனது கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான வேலைகளை நடிகர் விஜய் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக பிரம்மாண்டமான மாநாட்டை நடத்தவுள்ளதாகவும் பேசப்பட்டு வருகிறது.
அதோடு, மாநாட்டை முடித்து விட்டு 234 தொகுதிகளுக்கும் விஜய் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வந்துள்ளது. இந்நிலையில், தனது கட்சியில் சேரும் ரசிகர்கள் மற்றும் இளைஞர்களை ஒருங்கிணைத்து நிர்வாகிகளை நியமிக்க விஜய் முடிவு செய்துள்ளார். அதன்படி 2 லட்சம் நிர்வாகிகளை நியமிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதோடு தமிழக வெற்றி கழகத்தில் மகளிர் அணி, வக்கீல் அணி, இளைஞரணி என 30 அணிகளை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.