2 எம்.பி தொகுதி, 1 மாநிலங்களவை தொகுதி - மதிமுகவின் நிபந்தனை

2 எம்.பி தொகுதி, 1 மாநிலங்களவை தொகுதி - மதிமுகவின் நிபந்தனை

வைகோ 

திமுக கூட்டணியில் 2 மக்களவை தொகுதி மற்றும் 1 மாநிலங்களவை தொகுதி வழங்க வேண்டும் என்பதில் மதிமுக உறுதியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது;
திமுக-வுடன் கூட்டணி கட்சிகளாக இருக்கக்கூடிய அனைத்து கட்சிகளிடம் நாடாளுமன்றத் தேர்தலுக்காக தொகுதி பங்கீடு குறித்து முதல் கட்ட ஆலோசனை நிறைவு பெற்றுள்ளது இரண்டாம் கட்ட ஆலோசனை இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் தொடங்க உள்ள நிலையில் மதிமுக-வுடன் தொகுதி பங்கீடு குறித்து இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை 15-தேதிக்கு மேல் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையில் இரண்டு மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதி என மூன்று தொகுதியில் வழங்க வேண்டும் என்பதில் மதிமுக-வினர் உறுதியாக உள்ளனர் திருச்சி தொகுதியில் துரைவைகோ மற்றும் விழுப்புரம் அல்லது ஈரோடு தொகுதியில் கணேச மூர்த்தி வேட்பாளராக நிற்கவைக்க அதிக வாய்ப்புகள் என தகவல் வெளியாகியுள்ளது

Tags

Read MoreRead Less
Next Story