தலமலை - திம்பம் சாலையில் குட்டியுடன் பஸ்சை வழிமறித்த 2 காட்டு யானைகள்

தலமலை - திம்பம் சாலையில் குட்டியுடன் பஸ்சை வழிமறித்த 2 காட்டு யானைகள்

 காட்டு யானைகள்

தலமலை - திம்பம் சாலையில் குட்டியுடன் பஸ்சை வழிமறித்த 2 காட்டு யானைகள் சிறிது நேரம் ரோட்டில் சுற்றித்திரிந்து காட்டுக்குள் சென்றன.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியில் யானைகள், புலிகள், காட்டெருமை கள், மான்கள், சிறுத்தைப்புலி கள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் காணப்படு கின்றன. இதில் காட்டு யானை போன்ற விலங்குகள் அடிக்கடி உணவு தேடி அருகே உள்ள வனப்பகுதி சாலையை கடந்து செல்கின்றன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் இரவு வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் 2 காட்டு யானைகள் வெளியேறின. பின்னர் அவை அருகே உள்ள தலமலை-திம்பம் வனப்பகுதி சாலையில் நடந்து வந்தன. அப்போது அந்த வழியாக வந்த பஸ்சை வழிமறித்தன. அதன் பின்னர் யானைகள் நிற்பதை பார்த்த டிரைவர் பஸ்சை நிறுத்தி விட்டார். பின்னர் பஸ்சை மெதுவாக பின்னோக்கி இயக்கினார். அப் போது பஸ்சில் இருந்த பயணி கள் அச்சத்தில் உறைந்து போயினர். ஒரு சிலர் யானை களை தங்கள் செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். சிறிது நேரம் ரோட்டில் சுற்றித்திரிந்த யானைகள் காட்டுக்குள் சென்றன. அதன்பின்னரே பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் நிம்மதி அடைந்தனர்.

Tags

Next Story