தமிழகத்தில் 2024 -25 பட்ஜெட் தாக்கல் !

தமிழகத்தில் 2024 -25 பட்ஜெட் தாக்கல் !

தமிழகத்தில் 2024 -25 பட்ஜெட் தாக்கல் !

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. மாநில பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். இது, நிதியமைச்சராக தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மக்களவை தேர்தல் தேதிக்கான அறிவிப்பை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் வெளியிடும் நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலாவதன் கீழ் மக்களுக்கான நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட இயலாது.

எனவே,மாநில அரசுகள் முன்கூட்டியே பட்ஜெட் தாக்கலை மேற்கொள்வதன் வரிசையில் தமிழ்நாடு அரசு இன்று தாக்கல் செய்து வருகிறது. மாபெரும் தமிழ்க்கனவு என்னும் 7 தலைப்புகளில் பஜ்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

நாட்டின் இரண்டாவது பொருளாதார வளர்ச்சி மாநிலமாக தமிழகம் உள்ளது என தங்கம் தென்னரசு பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தமிழக பட்ஜெட் 2024 - 25

  • தமிழ் மின் நூலக மேம்பாட்டிற்கு இரண்டு கோடி ரூபாய் நீதிஒதுக்கீடு
  • 600 நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படும்.
  • அரிய நூல்களை பாதுகாக்க இரண்டு கோடி நிதி ஒதுக்கீடு.
  • சிலப்பதிகாரம் மணிமேகலை உள்ளிட்ட நூல்களை மொழி பெயர்க்க இரண்டு கோடி நிதி ஒதுக்கீடு.
  • தொல்லியல் துறைக்கு ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு
  • கீழடியில் ரூ.17 கோடியில் திறந்தவெளி அரங்கம்.
  • தொல் மரபணுவியல் ஆய்வக மேம்பாட்டிற்கு 3 கோடி நிதி ஒதுக்கீடு.
  • முதலமைச்சரின் தாயுமானவர் என்ற புதிய திட்டம் அறிமுகம். அதாவது வறுமை கோட்டுக்கு கீழே வாழும் 2.2 சதவீதம் மக்களை கண்டறிந்து அவர்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற அரசு முடிவு செய்துள்ளது. 5 லட்சம் வேலை குடும்பத்தினருக்கு அரசின் உதவிகளை வழங்கி அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க அரசு உறுதி.


Live Updates

Tags

Next Story