21 துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர வணக்க நாள் அனுசரிப்பு

21 துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர வணக்க நாள் அனுசரிப்பு

வீரவணக்க நாள்

திருவண்ணாமலையில் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் வீரவணக்கநாள் அனுசரிக்கப்பட்டது.

காவலர் வீர வணக்கநாள் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ந் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பணியின் போது வீர மரணமடைந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு இந்த நாளில் வீரவணக்கம் செலுத்தப்படுகிறது. இவ்வாறு நாடு முழுவதும் பணியின்போது வீர மரணமடைந்த 189 உயிரிழந்த போலீசாருக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடந்தது. போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பழனி, மாவட்ட ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

Tags

Read MoreRead Less
Next Story